'தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில் கிருஷ்ணகிரியின் பங்களிப்பு 16 சதவீதம்'
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஓசூர்:''தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், கிருஷ்ணகிரி மாவட்டம், 16 சதவீதம் வரை பங்களிக்கிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இரண்டாமிடத்தில் உள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏற்றுமதி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தொழில்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவா, கிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., செல்லக்குமார், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:நாட்டின், 75 வது சுதந்திர தின விழாவையொட்டி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சம் சார்பில், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக தேர்வு செய்துள்ள, 75 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று. இது தொடர்பாக, வெளிநாட்டு ஏற்றுமதி அமைச்சகத்துடன், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆட்டோ இன்ஜினியரிங் தயாரிப்புகள், மலர், பழங்கங்கள், பழக்கூழ் தயாரிப்புகள், கிரானைட் ஆகிய ஏற்றுமதியை மையப்படுத்த தயாரிப்பு அடையாளம் காணப் பட்டு உள்ளது.கடந்த 2020 - 21 ல் தமிழகம், 8.97 சதவீதம் அளவிற்கு, அதாவது, 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்து, மாநில அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், கிருஷ்ணகிரி மாவட்டம், 16 சதவீதம் வரை பங்களிக்கிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழக அரசு ஓசூரில் தொழில்துறை செயல்பாடுகளை அதிகரிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம், சிப்காட் 3, 4 மற்றும் 5 ம் கட்டங்களை அமைப்பதற்கான நிலங்களை கண்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மாவட்டத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும். ஓசூரில், விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவினரால் தயாரிக்கப்பட்ட செயல் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, ஏற்றுமதி பங்குதாரர்களிடம் இருந்து பரிந்துரைகள் மற்றும் உள்ளீடுகள் பெறப்பட்டன. வெளிநாட்டு ஏற்றுமதி இணை இயக்குனர் விஸ்வாஷ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூடுதல் இயக்குனர் ஜெகதீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X