கால்படி மண்ணை கூட எடுக்கல; ரூ.2 லட்சம் செலவாம் | மதுரை செய்திகள் | Dinamalar
கால்படி மண்ணை கூட எடுக்கல; ரூ.2 லட்சம் செலவாம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுரை,--'கண்மாயில் கால்படி மண்ணை கூட அள்ளாமல், கொட்டாம்பட்டி திருமேனி கண்மாய், வெள்ளையம்மாள் ஊருணியை சுத்தம் செய்ததாக தலா ரூ.ஒரு லட்சம் செலவுக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது' என, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் டி.ஆர்.ஓ. சக்திவேல், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:மாரிச்சாமி, மாடக்குளம்: மாடக்குளம் கண்மாயில் நடுமடை வழியாக தண்ணீர் செல்லும் கால்வாயை மாநகராட்சி ஆக்கிரமித்து அடைத்துள்ளது. தண்ணீர்பெருகினால் மாடக்குளம்கண்மாய் தண்ணீர் ஊருக்குள் வந்துவிடுகிறது.அன்பரசன், உதவி செயற்பொறியாளர், நீர்வளத்துறை: இந்த புகார் வரும் போதெல்லாம் மாநகராட்சியினர் எங்களிடம் மனுவை அனுப்புகின்றனர். ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சிதான் இப்பணியை செய்தது என்பதால் மாநகராட்சி மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.ஆனந்தராஜ், கொட்டாம் பட்டி: பள்ளப்பட்டி சொசைட்டியில் 200 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாததால் பயிர்க்கடன் பெற முடியவில்லை.குருமூர்த்தி, கூட்டுறவு இணைப்பதிவாளர்: அந்த சொசைட்டியில் தவறு நடந்ததால் தணிக்கை நடக்கிறது. முடிந்தபின் பயிர்க்கடன் வழங்கப்படும்.திருப்பதி, குலமங்கலம்: குலமங்கலம் சொசைட்டியில் பயிர்க்கடனுக்கு அடங்கலில் பசலி குறிப்பிடவில்லை என்று கூறி கடன் தரமறுக்கின்றனர்.கூட்டுறவு இணைப் பதிவாளர்: பசலி இன்றி கடன் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.ஜெயமாலா, கொடிக்குளம்: கொடிக்குளம் நெல் கொள்முதல் மையத்தில் நெல் விற்று 5 மாதமாகியும் பணம் வழங்கவில்லை.கலெக்டர்: பணம் தராமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.முருகேசன், கொட்டாம் பட்டி: திருமேனி கண்மாய்,வெள்ளையம்மாள் ஊருணியை தலா ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் சுத்தம் செய்ததாக அறிவிப்பு பலகை வைத்துஉள்ளனர். ஆனால் கால்படி மண்ணை கூட எடுத்து சுத்தம் செய்யவில்லை. பொதுப்பணித்துறையின் ஐயன்குளம் கண்மாயில் அனுமதியின்றி மீன் குத்தகைக்கு விட்டுள்ளனர். 'காசை யாரு ஆட்டைய போடுறாங்கனு' தெரியணும்.கலெக்டர்: நீர்வளத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை என்கின்றனர். மீன்வளத்துறையினர் தாங்களாக மீன்குத்தகைக்கு விட்டதாக சொல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, திருவாலவாயநல்லுார்: தேனுார் புதுக்குளம் கண்மாய் கால்வாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாங்கியது. பொதுப்பணித்துறை மாற்று ஏற்பாடு செய்யவில்லை. தண்ணீர் பெருகும் போது ஊர் மூழ்குகிறது. கால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.கலெக்டர்: இந்த புகார் மீண்டும் வரக்கூடாது. பொதுப்பணித்துறை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.நாகேந்திரன், மேலுார்: தேங்காய் விலை வீழ்ச்சிஅடைந்துள்ளது. மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரைக்கு விலை கிடைப்பதில்லை. இங்கு நிரந்தர கொள்முதல்மையம் அமைக்க வேண்டும்.கலெக்டர்: குழுவாக இணைந்து செயல்பட்டால் விற்பனை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X