சேதமடைந்த மடையை சரிசெய்யாததால் தரிசாகும் நிலங்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
சேதமடைந்த மடையை சரிசெய்யாததால் தரிசாகும் நிலங்கள்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 

மேலுார்--கூலிப்பட்டி பகுதியில் கடந்தாண்டு ஏற்பட்ட மடை உடைப்பை சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுத்தும் மறுப்பதாக பொதுப்பணித்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.மேலுார், கள்ளந்திரி - குறிச்சிபட்டி வரை ஒரு போக பாசன பகுதியில் 86 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தனியாமங்கலத்தில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் 22 வது பிரதான கால்வாயில் இருந்து 6 வது மடை வழியாக மரவெட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பி அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பயன் பெறும். ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட மடை உடைப்பால் தண்ணீரின்றி கண்மாய் வறண்டுள்ளது. விவசாய சங்கத்தலைவர் பாண்டி கூறியதாவது: கடந்தாண்டு தண்ணீர் திறப்பின் போது மடை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. உதவிப் பொறியாளரை தொடர்பு கொண்ட போது அறுவடை முடிந்ததும் புதிதாக மடை கட்டித் தருவதாக கூறினார். அதனால் விவசாயிகள் சொந்த செலவில் தற்காலிகமாக சிமென்ட் குழாய் பதித்தோம். இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் வரும் நிலையில், இதுவரை மடை கட்டவில்லை. அதனால் கண்மாய் வறண்டு தண்ணீர் இல்லாமல் ஏராளமான ஏக்கர் தரிசாகும் அவலம் நிலவுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக மடை கட்ட வேண்டும், என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், ''மடை பாதிப்பு குறித்து விசாரித்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X