சைக்கிள் ஸ்டாண்டில் 'வழிப்பறி' வசூல் வேட்டை | மதுரை செய்திகள் | Dinamalar
சைக்கிள் ஸ்டாண்டில் 'வழிப்பறி' வசூல் வேட்டை
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 



திருமங்கலம்,-நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் நிர்ணயித்ததை விட கூடுதலாக 'வழிப்பறி' போல கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் செயல்படும் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 5க்கு பதில் ரூ. 12 வசூலிக்கப்படுகிறது. மேலும் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்படாமல் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதுவதால் சேதமடைகின்றன. உரிய அனுமதி பெறாமல் செயல்படும் தனியார் வாகன காப்பகங்களிலும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.நகராட்சி கமிஷனர் டெரன்ஸ் லியோனிடம் கேட்டபோது, ''கூடுதல் கட்டணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X