காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு பாதிப்பு | மதுரை செய்திகள் | Dinamalar
காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு பாதிப்பு
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 



உசிலம்பட்டி---உசிலம்பட்டி பகுதி வயல்களில் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி, மானூத்து, தும்மலப்பட்டி, ஜோதில்நாயக்கனூர் பகுதி கண்மாய்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் பதுங்கும் இந்த பன்றிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மீனாட்சிபுரம் அருணாசலம் கூறுகையில், ''தோட்டத்தில் 3 ஏக்கரில் சோளம் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.இரவு நேரங்களில் புகுந்து ஒரு ஏக்கரில் சோளப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.ஒருபக்கம் காவல் இருந்தாலும் மறுபுறம் புகுந்து விடுகின்றன. அவற்றை கண்காணிக்க முடியவில்லை. வனத்துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X