வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயிற்சி | மதுரை செய்திகள் | Dinamalar
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயிற்சி
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 

மேலுார், - உறங்கான்பட்டி, புலிமலைப்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் துறை, மதுரை வேளாண்மை கல்லுாரி அறிவியல் மையம் சார்பில், தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் உதவி இயக்குநர் செல்வி வரவேற்றார். இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் உஷாராணி, உதவி பேராசிரியர் பழனிக்குமார், துணை இயக்குநர் சுப்புராஜ் ஆகியார், சுருள் வெள்ளை ஈக்களால் தென்னையில் ஏற்படும் பாதிப்புகள், தடுக்கும், அழிக்கும் முறைகள் பற்றியும், இடுபொருட்கள் மற்றும் அனைத்து துறை பணிகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் செய்திருந்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுக்கிர்தா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X