ராயநல்லுாரில் மருத்துவ முகாம் | கடலூர் செய்திகள் | Dinamalar
ராயநல்லுாரில் மருத்துவ முகாம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


கடலுார், : காட்டுமன்னார்கோவில் அடுத்த ராயநல்லுாரில் பொது மருத்துவ முகாம் நடந்தது.ராயநல்லுார் மருதநில மைந்தர்கள் நற்பணி மன்றம், காட்டுமன்னார்கோவில் அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு தேசிய நல்லாசிரியர் சின்னமணி தலைமைதாங்கினார்.நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பொது மருத்துவம், காது மூக்கு, தொண்டை, கண், எலும்பு முறிவு, தோல் போன்றவைகளுக்கு பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ராமச்சந்திரன், தங்கதுரை, வெங்கடேசன், கண் மருத்துவர் இளையராஜா, சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிம்ஸ் மருத்துவமனை ராஜசெல்வம் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X