கடலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று எஸ்.ஐ., பணிக்கான தேர்வு | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று எஸ்.ஐ., பணிக்கான தேர்வு
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று துங்கும் எஸ்.ஐ., பணிக்கான தேர்வுக்கான பணியில் 900 பேர் ஈடுபடுகின்றனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால், காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) 2 நாட்கள் நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் 9,278 பேர் எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லுாரி, புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்ட்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய 5 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.இன்று காலை 10:00 மணிக்கு துவங்கி, 12:30 வரை பொது எழுத்துத்தேர்வும், மதியம் 3:30 மணி முதல் மாலை 5:10 வரை தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வும் நடக்கிறது. நாளை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 வரை துறைரீதியான எழுத்துத்தேர்வும் நடக்கிறது.தேர்வு பணியில் ஏ.டி.எஸ்.பி., 8 டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் போலீசார் மற்றும் போலீஸ் அமைச்சுப்பணியாளர்கள் 900 பேர் ஈடுபடுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X