பருத்தி செடியில் மாவு பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் | மதுரை செய்திகள் | Dinamalar
பருத்தி செடியில் மாவு பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய் விவசாயத்திற்கு அடுத்து 8 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் பல்வேறு இடங்களில் மாவுப்பூச்சி தாக்குதலால் வீணாகி வருகிறது.நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் கூறியதாவது:முதுகுளத்துார் வட்டாரத்தில் ஏராளமான கிராமங்களில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

150 முதல் 180 நாட்கள் வரை பருத்தி வளரும் பயிரானது.அதிக வெப்பம் காரணமாக பருத்தி செடியில் மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் செடிகள் வளர்ச்சி இன்றி பாதிக்கப்பட்டுள்ளது.இப்பூச்சிகள் குறைந்த நாளில் வேகமாக பரவக்கூடியது. பருத்தி பயிர் மட்டும் இல்லாமல் பல்வேறு பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் வயலில் களைச்செடிகள் ஏதும் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.பின்பு 10 மி.லி. வேப்பெண்ணைய்யை மருந்துடன் 10 மி.லி. மீன் எண்ணெய் சோப்புடன் கலந்து தெளிக்கலாம், அல்லது மாலதையான் 50 இசி அல்லது பிரப்பெனோபாஸ் 50 இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. அளவில் ஒட்டும் திரவம் லிட்டருக்கு அரை மி.லி. சேர்த்து செடிகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு காலை மாலை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். செடியில் அறிகுறிகள் தெரிந்தவுடன் விவசாயிகள்முறையை பின்பற்ற வேண்டும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X