ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ மாணவ, மாணவியர் அனைவரும், தேர்ச்சி
பெற்றனர்.
பிளஸ் 2வில், 589 மதிப்பெண் எடுத்து மாணவி முதலிடம் பிடித்தார். வேதியியல் பாடத்தில் மூன்று பேர், வணிகவியல் பாடத்தில் ஒருவர், பொருளியல் பாடத்தில் ஒருவர், 100க்கு 100 மதிப்பெண்
பெற்றனர்.
இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில், 500க்கு, 486 மதிப்பெண் எடுத்து மாணவி முதலிடம் பெற்றார். கணித பாடத்தில் நான்கு பேர், அறிவியலில் மூன்று பேர், 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை
படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறக்கட்டளை தலைவர் முத்துசாமி, செயலாளர் பழனிசாமி, பொருளாளர் கார்த்திகேயன், பள்ளிக்கூட தாளாளர் செங்கோட்டுவேலன், முதல்வர் மைதிலி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.