செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காங்கேயம் யூனியன் கூட்டம்;
புதிய பணி குறித்து தீர்மானம்
காங்கேயம், ஜூன் 25-
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டம், சேர்மன் மகேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் யூனியன் மூலம், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பணி தேர்வு செய்வது, வணிக வரித்துறை அலுவலகம் கட்ட, யூனியனுக்கு சொந்தமான நிலத்தை வழங்குவது, ஜூலை 2ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமுக்கு, விளம்பரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை சேர்மன் ஜீவிதா ஜவஹர், அனைத்து கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரியம், வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசு கல்லுாரிக்கு ஆசிரியர்
தேவை; முதல்வர் அழைப்பு
காங்கேயம், ஜூன் 25-
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2022-23ம் கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல் துறை ஆகிய பாடங்களுக்கு விரிவுரையாளர்கள் தேவை. விருப்பமுள்ளோர் கல்லுாரி அலுவலகத்தில் தங்கள் விபர குறிப்புகளை ஜூலை, ௧ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்லுாரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லாட்டரி விற்றவர் கைது
காங்கேயம், ஜூன் 25-
வெள்ளகோவில் போலீசார், கச்சேரிவலசு பகுதியில், சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோகுல், 22, என்பவர், கேரளா லாட்டரி சீட்டை, டோக்கன் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கேரள லாட்டரி டிக்கெட்டுக்கான டோக்கன், ரொக்கப்
பணத்தை பறிமுதல் செய்தனர்.
பயோ கெமிக்கல் கம்பெனிக்கு
ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
தாராபுரம், ஜூன் 25-
தாராபுரம் அருகே, முறைகேடாக செயல்பட்ட கம்பெனிக்கு, ௫௦ ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாராபுரத்தை அடுத்த கெத்தல்ரேவ், தேர்பாதை பகுதியில், ஜி.கே.பயோ கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், பஞ்., தலைவர் சரண்யா, செயலர் சுமதி ஆகியோர், ஆலையில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
மஞ்சள் சார்ந்த தொழிற்சாலை எனக் கூறப்பட்ட ஆலையில், கெமிக்கல் சார்ந்த தொழில் நடப்பதை கண்டுபிடித்தனர். மேலும் ஆய்வில், பயோ-டீசல் கம்பெனி என்பதும், உரிய அனுமதி பெறவில்லை எனவும், கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்படுவதும் தெரிந்தது. இதையடுத்து ஆலைக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஈரோடு - திருச்சி ரயில்
ஜூலை 9 முதல் இயக்கம்
சேலம், ஜூன் 25-
ஈரோடு - திருச்சி பயணியர் சிறப்பு ரயில், ஜூலை, 9 முதல் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு - திருச்சி முன்பதிவற்ற சிறப்பு ரயில், ஜூலை, 9 முதல் தினமும் காலை, 8:10க்கு கிளம்பி, கரூர் வழியே, மதியம், 12:00 மணிக்கு திருச்சியை அடையும். மறுமார்க்கத்தில், ஜூலை 9 முதல் தினமும் மாலை, 4:30க்கு புறப்பட்டு, இரவு, 8:20 மணிக்கு ஈரோட்டை அடையும்.

முயல் வேட்டை: ௨ பேருக்கு அபராதம்
சத்தியமங்கலம், ஜூன் 25-
வனத்தில் முயல் வேட்டையாடிய இருவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம் வனத்துறையினர், கடம்பூர் கிழக்கு பீட் பகுதியில், ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் திரிந்த சின்ன சாலட்டியை சேர்ந்த ரங்கசாமி, 32, சிவலிங்கம், 50, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இருவரும் சேர்ந்து வனப்பகுதியில் முயலை வேட்டையாடியதும், சமைத்து சாப்பிட கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். இருவருக்கும், ௧௫ ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X