வடகுமரையில் இன்று நடக்கவிருந்த கோவில் நுழைவு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வி.சி., தலைவர் திருமாவளவன், வீடியோ கான்பரன்ஸ் மூலம், மக்களிடம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், வடகுமரையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், காளஹஸ்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளன. அங்கு, ஒரு சமுதாயத்தினர் வழிபட, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வி.சி., கட்சி சார்பில், இன்று கோவில் நுழைவு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று, அப்பகுதி மக்களிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ''வழக்கில் கோவில்
பூட்டிய நிலையில் இருக்க வேண்டும்; தற்போதைய நிலை தொடர வேண்டும் எனும் உத்தரவு உள்ளதால், போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.
இதுகுறித்து, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு, தலைமை நிலைய செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர், அப்பகுதி மக்களிடம், போராட்டம் ஒத்திவைப்பு குறித்து தகவல் தெரிவித்தனர்.