ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பறவை, விலங்குகள் ஸ்பெஷல். வட இந்தியர்களோடு குழுவாக சென்று காசிரெங்கா, மானஸ் தேசிய பூங்கா, கூர்கில் பறவை, விலங்குகளை படம்பிடித்துள்ளேன். தமிழகத்தில் வேட்டன்குடி, காரங்காடு, நீலகிரி, கொடைக்கானல், பழநிமலை, வால்பாறை, கோத்தகிரி மற்றும் மூணாறு காடுகளில் தனியாகவே சுற்றித் திரிந்து படம் எடுத்துள்ளேன். நாக்பூர் அருகே தடோபாவில் நிறைய புலிகளை படம் எடுத்தது பெரிய அனுபவமாக இருந்தது.
மனிதர்களை பார்த்து பழகிய புலிகளுக்கு பெயர் வைத்து பெருமை சேர்க்கின்றனர். மனித வாசனை இல்லாத புலிகளை சந்திப்பது மிகப்பெரிய சவால்.காட்டில் நுழைந்தவுடன் பறவை, விலங்குகள் நம்மை சந்தித்து ஹலோ சொல்லி 'போஸ்' கொடுக்காது. சில நேரங்களில் 100 கிலோமீட்டர் சுற்றி திரிந்து படமெடுத்த அனுபவமும் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் ஜெயப்பூரில் ஜலேனா காட்டுக்கு தனியாக சென்று படமெடுத்தது த்ரில்லிங் அனுபவம்.மனிதன் உருவாக்கிய செயற்கை இடங்களுக்கு நான் சென்றதில்லை. இயற்கை உருவாக்கிய அதிசய காடுகளின் மீது என் காதல் என்று சொல்லும் சுபா இதுவரை 450 பறவை, விலங்குகளை தன் கேமராவில் பதிவு செய்துள்ளார்.-