குடிநீர் குழாய்க்குள் அடைப்பு  | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
குடிநீர் குழாய்க்குள் அடைப்பு 
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


ராமநாதபுரம், : ராமநாதபுரம் தெருக்களில் உள்ள புங்கன் மரத்தின் வேர் அடர்ந்து வளர்ந்து காவிரி குடிநீர் குழாய்க்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்துவதால் பல இடங்களில் குடிநீர் வினியோகம் தடைபடுகிறது.ராமநாதபுரம் நகராட்சியில் தினமலர் நகர், புளிக்கார தெரு, சேட் இப்ராஹிம் தெரு உள்ளிட்ட பல இடங்களில் புங்கன் மரங்கள் தெருக்களில் உள்ளன. நிழல் தரும் இம்மரங்களின் வேர் 50 மீ.,க்கும் அதிகமான துாரத்திற்கு வளர்ந்து செல்கிறது.

இந்த வேர் காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து குழாய் முழுவதும் அடைத்து குடிநீர் விநியோகத்தை தடை செய்கிறது. அடிக்கடி இதுபோல் வேர்கள் அடைத்துக்கொள்ளும் நிலையில், நகராட்சி ஊழியர்கள் இதனை தோண்டி குழாய் முழுவதும் அடைத்துள்ள வேரை அகற்றுகின்றனர்.பிளாஸ்டிக் குழாய்களை எளிதாக வேர் ஓட்டையிட்டு உள்ளே வளர்வதால், வேர்கள் புகாத அளவில் சில்வர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X