மாணவர்கள் லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மதுரை : மாணவர் இயக்கம் தமிழக அரசியலுக்கு அந்நியமானது அல்ல. மாணவர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை கடுமையாக பார்க்கக் கூடாது. நிச்சயமாக ஒரு லட்சுமண ரேகை உள்ளது. அதை மாணவர்கள் ஒருபோதும் தாண்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. நாங்குனேரி அருகே கள்ளிக்குளம் சூர்யா. இவர் திருநெல்வேலி செயின்ட் ஜான்ஸ் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்தார்.

2022 பிப்ரவரியில் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்தார். இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) மாணவர் அமைப்பு சார்பில் சென்னையில் தடையை மீறி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க ஊர்வலமாக செல்ல முயன்றதாக சூர்யா உட்பட சிலர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.சூர்யா கைது செய்யப்பட்டார். அவர் பிப்.22ல் ஜாமினில் வெளியே வந்தார்.

போலீசாரின் தகவல் அடிப்படையில் பிப்.24ல் சூர்யாவை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இதை ரத்து செய்து தொடர்ந்து கல்லுாரியில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி சூர்யா உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.கல்லுாரி நிர்வாகம் தரப்பு: மனுதாரர் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை பேண, சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தது.நீதிபதி: சரியான காரணங்களுக்காக ஒரு மாணவரை சஸ்பெண்ட் செய்யும் கல்லுாரி நிர்வாகத்தின் அதிகாரத்தை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்க முடியாது.

ஒரு மாணவரின் வருகைப் பதிவு குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அவர் தேர்வு எழுத முடியாது என்பது கல்லுாரி நிர்வாகத்திற்கு தெரியும். எனவே சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பிக்கும்போது, போதிய வருகைப் பதிவு பூர்த்தியாகும் வகையில் ஒழுங்கு நடவடிக்கையை விரைவாக முடிக்க கல்லுாரி நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரம் கருதி மாணவர் கடும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தால், உத்தரவை விரைவில் பிறப்பிக்க வேண்டும்.

இதனால் மாணவர் சட்டத்திற்குட்பட்டு தீர்வை நாட முடியும்.காலத்தின் அம்பு முன்னோக்கி மட்டுமே நகர்கிறது. கடிகாரத்தை திரும்ப வைக்க முடியாது. குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நடவடிக்கைகளை முடிக்காமல், சஸ்பெண்ட் உத்தரவை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம், போதிய வருகைப்பதிவு இல்லாமல், மாணவர் தேர்வு எழுதும் உரிமையை இழக்க நேரிடும். மனுதாரர் மிக சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை கொத்தனார். மனுதாரர் இறுதி செமஸ்டரில் இருக்கிறார். அவர் அனுதாபம், அதிக அக்கறையுடன் நடத்தப்படத் தகுதியானவர். படிப்பை முடித்ததும் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பார்.

கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்காததால் மனுதாரரால் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. கல்லுாரி நிர்வாகத்தின் செயலுக்காக மனுதாரர் பாதிக்க முடியாது. அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மனுதாரரை அடுத்து நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒரு லட்சுமண ரேகை உள்ளது. அதை மாணவர்கள் தாண்டக்கூடாது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அந்த கோட்டிற்குள் இருப்பது எனக்கு திருப்தியளிக்கிறது.

அவர்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. அவர்களை போலீசார் முறையாக கைது செய்துள்ளனர். அவர்களை ரிமாண்டிற்கு ஆஜர்படுத்திய விதமானது நியாயமற்றது. ரிமாண்ட் உத்தரவை பிறப்பித்த ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. ரிமாண்ட் தொடர்பான உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை மாஜிஸ்திரேட் கவனத்தில் கொள்ளாதது தெரிகிறது. மனுதாரரை சஸ்பெண்ட் செய்த கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X