ஜான் டூயி மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சாதனை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஜான் டூயி மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சாதனை
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


விழுப்புரம் : விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் ஆண்ட்ரூஅசரியா 593 மதிப்பெண் பெற்று , மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார்.மாணவி ஜெனனி 588, மாணவர் பாரதிராஜா 586 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் அடுத்த சிறப்பிடம் பிடித்தனர்.கணிதத்தில் 2 பேர், இயற்பியலில் 2, உயிரியலில் 5, கணினி பொறியியலில் 9, கணினி பயன்பாடு பாடத்தில் 2, பொருளியலில் 1, கணக்கு பதிவியலில் 3 பேர் என மொத்தம் 24 மாணவர்கள் பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.



சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் வீரதாஸ் பாராட்டி கேடயம் வழங்கினார். பள்ளி செயலர் ெஷர்லி வீரதாஸ், நிர்வாக அதிகாரி டாக்டர் எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின், பள்ளி முதல்வர் ஆஸ்லி ஜோசப் கென்னடி, பொறுப்பாசிரியர் யாஸ்மின் பேகம் ஆகியோர் பாராட்டினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X