பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்; 15 வாகனங்கள் நிராகரிப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்; 15 வாகனங்கள் நிராகரிப்பு
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 


விருதுநகர் : விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.நேற்று விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள, சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட 84 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 300 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 285 வாகனங்கள் முழு தகுதி பெற்றன. 15 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன. தீயணைப்புத்துறை மூலம் வாகனத்தில் தீ விபத்து மீட்பு, சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.முதலுதவிப் பயிற்சி குறித்து 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள்செயல்முறை விளக்கம் அளித்தனர்.பொது மருத்துவ முகாம், வாசன் கண் மருத்துவமனையின்இலவச கண்சிகிச்சை முகாமில்டிரைவர்கள்பங்கேற்றுபயன்பெற்றனர்.அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X