புதிய வடிவமைப்பில் மாதிரி ரேஷன் கடைகள்:உணவுத்துறை செயலாளர் தகவல்
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை;''புதிய வடிவமைப்புடன் மாதிரி ரேஷன் கடைகள் அமைப்பதற்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது,'' என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று ரேஷன் கடை, மத்திய கூட்டுறவு வங்கி, அரசு கிடங்கு, எல்லை சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, நிருபர்களிடம் கூறியதாவது:ரேஷன் கடைகளை நம்பி தமிழகத்தில், 34,777 கடைகளில், 2.12 கோடி கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தரமான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதியோருக்கு பயோ மெட்ரிக் கருவியில் ரேகை பதிந்து பொருட்கள் வழங்குவதில் சவால்கள் உள்ளன. ஒரு சில இடங்களில் கருவிகள் மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சில நேரத்தில் தரமற்ற பொருள் வந்தால், அதை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்று கூறியுள்ளோம்.விற்பனை ஆகாத பழைய அரிசி இருந்தால், அதை பொதுமக்களுக்கு தராமல் குடோனுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாதிரி ரேஷன் கடைகள்

தமிழகம் முழுதும் மாதிரி ரேஷன் கடைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.கடைகளின் வடிவமைப்பை படிப்படியாக மாற்றி, 'மாடர்ன்' கடைகளாக உருமாற்றம் செய்யப்படும்.ஒவ்வொரு மாதமும் கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் டி.எஸ்.ஓ., ஆகியோர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எல்லையோர மாவட்டங்களில் அரிசி கடத்தல் பெரும் சவாலாக இருக்கிறது. இலவசமாக வழங்கும் அரிசியை வாங்கிச்சென்று பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன.கடந்த மே 21 முதல் இதுவரை அரிசி கடத்தல் தொடர்பாக 2853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40488 குவிண்டல் அரிசியும், கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 901 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரவில் சோதனை
ஆந்திரா, கேரளா எல்லையோர பகுதிகளில் 41 சோதனைச்சாவடிகளில் இரவு நேரங்களில் சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளின் விதிமுறை, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்குமெனில் அவற்றை மாற்றிக் கொள்ள அரசு தயாராக உள்ளது.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X