கோவை:கோவையிலிருந்து ஐதராபாத்துக்கு சிறப்பு விமானச் சுற்றுலாவை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., பல்வேறு சுற்றுலாக்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லுாரிகளுக்கான கல்வி சுற்றுலா ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. தற்போது, விமானம் மூலமும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், ஐதராபாத் சுற்றுலா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, வரும் ஆக., 26 ம் தேதி கோவை - ஐதராபாத் சிறப்பு விமான சுற்றுலாவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மூன்று நாட்கள் சுற்றுலாவுக்கு, 17 ஆயிரத்து 050 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணம், ஏ.சி., ஓட்டலில் தங்கும் வசதி, ஏ.சி., வாகனம் மூலம் சுற்றிப்பார்க்கும் வசதி, சுற்றுலா வழிகாட்டி, உணவு ஆகியவை அடங்கும். மேலும், விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., கோவை அலுவலகத்தை, 82879 32114, 90031 40655, மதுரை அலுவலகத்தை 82879 31977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.