கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், இந்த மாதம், வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், யானை, காட்டுப் பன்றிகள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை நாசம் செய்து விடுகின்றன.விலங்குகளை விரட்ட, மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை; காவலும் காப்பதில்லை. அதற்கு பதில், விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க, மூங்கிலால் ஆன கருவியை பயன்படுத்தியுள்ளனர்.அதன் பெயர், மூங்கில் பன்றி முடுக்கி. லிட்டர் படி அளவு சுற்றளவு கொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்து, நடுக் கணுவில் வாசல் போலத் துளையிட்டு காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனர்.