காட்சிப்பொருளாக நிற்கும் மின்சார வாகனங்கள்
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் தெருக்களில் தேங்கும் குப்பையை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்காக லாரிகள், டிராக்டர்கள், தள்ளு வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதில் குறுகலான தெருக்களில் லாரி, டிராக்டர்கள் கொண்டு செல்ல தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். எனவே, காலதாமதமின்றி தூய்மைப் பணியை மேற்கொள்ள, 2018 முதல் உள்ளாட்சிகளுக்கு மினி பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.இதன் மூலம் தெருக்களில் சேரும் கழிவுகள் உடனடியாக அள்ளப்பட்டு, உரக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இந்த வாகனங்களை பயன்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டது.வயது முதிர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மினி பேட்டரி வாகனங்களை இயக்க முடியாத நிலை இருந்தது. மேலும், தரமற்ற பேட்டரிகளால் பல வாகனங்கள் பயன்படுத்தப்பட முடியாமல் நகராட்சி அலுவலகங்களில் முடங்கியது.தற்போது இதில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான மினி பேட்டரி வாகனங்கள் பயன்படுத்த முடியாமல், பல மாதங்களாக உள்ளாட்சி அலுவலகங்களில் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 34 வாகனங்களில் 8 வாகனங்கள் தற்போது காட்சிப்பொருளாக நிற்கின்றன. இதே நிலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் காணப்படுகிறது. இதனை சீரமைக்க போதிய நிதியின்மை காரணமாக புதிய பேட்டரிகள் வாங்க முடியாமல் பல வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி நிற்கின்றன.

இதனால் என்னதான் தூய்மைப் பணி இயக்கம் நடத்தினாலும், பெரும்பாலான தெருக்களில் சாக்கடையில் அடைபட்டும், கழிவுகள் ரோட்டில் குவிந்தும் தூய்மையற்ற நிலை மாவட்டம் முழுவதிலும் காணப்படுகிறது.எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் முடங்கிக் கிடக்கும் மின் பேட்டரி வாகனங்களை உடனடியாக சீர்செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X