திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தகுதித் தேர்வில், 1,082 பேர், தேர்வு எழுத வரவில்லை.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில், உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான, தகுதி எழுத்துத் தேர்வு, நேற்று, ஐந்து மையங்களில் நடந்தது.கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் நடந்த தேர்வில், 5,548 பேர்விண்ணப்பித்திருந்தனர்.நேற்று, பகல், மதியம் என, இரண்டு பகுதியாக தேர்வு நடந்தது.
இந்த தேர்வில், 4,466 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 215 பெண்கள் உட்பட, 1,082 பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்விற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை, எஸ்.பி. சி.பி.கல்யாண் தலைமையில், போலீசார் செய்திருந்தனர்.திருத்தணியில் தனியார் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த மையத்தில், 939 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக, காலை 8:00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் 700க்கும் மேற்பட்ட பெண்கள்வந்திருந்தனர்.