சித்தாமூர்:ஜமீன்பூதுார் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவை முன்னிட்டு, அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி, விமரிசையாக நடந்தது.
நேற்று காலை, அர்ஜூனன் தபசு நிகழ்ச்சியில், பதினெட்டு படிகள் உடைய தபசு மரத்தின் மீது ஏறி, அர்ஜுனன் தவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகவும், திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என வேண்டியும், தபசு மரத்திலிருந்து அர்ஜுனன் வீசிய எலுமிச்சம்பழத்தை, சேலையின் முந்தானையால் பெண்கள் பிடித்தனர்.வசந்த விழா, வரும் 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்று மதியம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி விழாவும் நடக்கிறது.