2 தம்பதிகள் தீக்குளிக்க முயற்சி; எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


விழுப்புரம் : சொத்து தகராறில் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 2 தம்பதிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவசங்கர், 60; முருகன், 56; ரமேஷ், 45; மூவரும் சகோதரர்கள்.இதில், முருகன், ரமேஷ் ஆகிய இருவரும் குடும்பத்துடன் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கும், சிவசங்கர் மகன் ராம்கி, 30; என்பவருக்கும் மோட்சகுளம் பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த நிலத்தில், ராம்கி, அவரது மனைவி சாந்தி, உறவினர்கள் பிரபா, வினோத் ஆகியோர் கரும்பு நடவு செய்ய முயன்றனர். இதனை ரமேஷ், முருகன் தட்டிக் கேட்டனர்.இது தொடர்பாக முருகன், ரமேஷ் தரப்பினர் வளவனுார் போலீஸ் மற்றும் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த முருகன் அவரது மனைவி வள்ளி, ரமேஷ் அவரது மனைவி சாந்தி ஆகிய 4 பேரும் நேற்று மாலை 5:30 மணியளவில் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தவர்கள், மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.உடன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X