கடலுார் : துாக்கணாம்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனின் சகோதரர் ரவி தம்பதியரின் மணி விழா நடந்தது.துாக்கணாம்பாக்கம் இல்லத்தில் நடந்த விழாவில் ராமமூர்த்தி, ரகுராமன், பிரகாஷ், பிரதீபா மணி, முரளி வரவேற்றனர். எம்.எல்.ஏ., அய்யப்பன், லீமா அய்யப்பன் ஆகியோர் ரவி-பரிமளா தம்பதியினரை வாழ்த்தினர்.விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராமலிங்கம், ஆதி பெருமாள், ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஞானப்பிரகாசம், மனோகரன், ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் கர்ணன், வேலன் ஸ்டீல் வேல்முருகன், சன் பிரைட் பிரகாஷ், பிரகாஷ், கணேஷ், ராமலிங்கம், வரதன், சீனு, குமார், முத்துவேல், தனசேகரன், வேணு, பிரகாஷ், செந்தில், சிவக்குமார், சதீஷ் பங்கேற்றனர்.