விருத்தாசலம் : 'தொண்டர்களால்ஓ.பி.எஸ்., புறக்கணிக்கப்பட்டுள்ளார்' என அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.இது குறித்து அவர், கூறியதாவது;ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ்., தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம் அவரது பண்முகத்தன்மை தான்.பா.ஜ.,வும் வேண்டும், தி.மு.க.,வும் வேண்டும், அவரது குடும்பமும் வேண்டும் என எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கிறார். அவது மகன், ஸ்டாலினை சந்தித்து, சிறப்பான ஆட்சி என்கிறார்.ஏற்கனவே, அவரது தம்பியை இருமுறை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். அதுபோல, அவரது மகனையும் நீக்க வேண்டும்.தீயசக்தி தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என உருவானது அ.தி.மு.க., அதன் தலைமை பொறுப்பில் ஒருவராக இருந்து கொண்டு, அ.தி.மு.க.,வை சரியாக வழிநடத்தவில்லை என்ற காரணத்தால், ஒட்டுமொத்த தொண்டர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டு விட்டார்.
எனவே, ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.,வை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.