சிதம்பரம், : 'பா.ஜ., வை நம்பி போகிறவர்கள் மண் குதிரையில் சென்று ஆற்றுக்குள் இறங்குவதற்கு சமம்' என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அவர், அளித்த பேட்டி;அ.தி.மு.க., கேப்டன் இல்லாத கப்பல் போல் சென்று கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு கொள்கையும் இல்லை. கோட்பாடும் இல்லை. தலைமையும் இல்லாத அவல நிலையில் சென்று கொண்டிருக்கிறது.தமிழகத்திற்கு வழிகாட்டும் இயக்கம் தி.மு.க., தமிழக முதல்வரின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அனைவரையும் இணைத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் அரசாக உள்ளது.தமிழக மக்கள் அ.தி.மு.க., சலசலப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
எங்கு சரியான தலைமை இல்லையோ அங்கு இது போன்ற பிரச்னைகள் இருப்பது சகஜம்.பா.ஜ.,விற்கு தமிழகத்தில் இடமில்லை. பா.ஜ., வை நம்பி போகிறவர்கள் மண் குதிரையில் சென்று ஆற்றுக்குள் இறங்குவதற்கு சமம். யார் பா.ஜ.,வில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆபத்தாகத் தான் முடியும்.இவ்வாறு அவர், கூறினார்.