மனைவி கொலை; கணவர் சரண்
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் நாகராஜ், 32; கொத்தனார். இவருக்கும், கம்மாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் ராஜலட்சுமி, 25, என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு துவக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். இருவரும் கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர்.குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று பிரச்னை ஏற்பட்டதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவி கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நாகராஜ்சரணடைந்தார்.உடன் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து, கணவர் நாகராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X