மணல் கடத்திய லாரி பறிமுதல்
குழந்தையின் அறுவை சிகிச்சைக்குஉதவிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,கிருஷ்ணகிரி: பர்கூர் ராமசாமி நகரை சேர்ந்தவர்கள் சரத்குமார், சத்யா தம்பதி. இவர்களின் ஒரு வயது குழந்தை பிரணித். குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தகவலறிந்த பர்கூர் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாநில விவசாய அணி துணை தலைவருமான மதியழகன், குழந்தையின் பெற்றோரான சரத்குமார் - சத்யா தம்பதிக்கு நிதியுதவி வழங்கி, குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தார். அப்போது, மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் நாகராஜ் உடனிருந்தார்.
ஏரியில் ஆண் சடலம் மீட்புபோச்சம்பள்ளி: மத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையோரமுள்ள ஏரி நிரம்பி உள்ளது. இதில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. தகவலின்படி வந்த மத்துார் போலீசார், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலைதர்மபுரி: தர்மபுரி அடுத்த முருக்கம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாது, 61. இவருக்கு மது பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இவரது குடும்பத்தினர் மது வாங்க பணம் தராததால் விரக்தியடைந்த மாது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்குமாரம்பட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், 40 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் தலை நசுங்கிய நிலையில் கிடந்தது. தகவலின்படி சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற என தெரியவில்லை. பின், சேலம் கோட்ட ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்து, இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் விபரீத முடிவுஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, துறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. இவர், போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள, தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தன் வீட்டிற்கு தெரியாமல், உடன் பணிபுரிவோரிடம் கடன் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காததால், அவர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டுள்ளனர். சூர்யாவை அவரது தந்தை சின்னராஜ் கண்டித்துள்ளார். மனமுடைந்த சூர்யா, கடந்த, 19ல் எலி பேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று இறந்தார். இது குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழமையான மரங்கள் முறிந்துவிழுவதால் மக்கள் அச்சம்ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சின்னபொம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 100 ஆண்டுகளுக்கும் மேலான புளிய மரங்கள் பல உள்ளன. இவை எந்த நேரத்திலும் குடியிருப்பு வீடுகள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படும் என்பதால், அதை அகற்ற வேண்டி, கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம், பலமுறை மனு கொடுத்துள்ளனர். நேற்று அதிகாலை, தண்டபாணி என்பவரின் வீட்டின் மீது புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதில், வீட்டின் வீட்டின் சிமென்ட் சீட், கதவு, ஜன்னல்கள் பெயர்த்து சேதமடைந்தன. மரம் விழுந்தவுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், வீட்டின் அருகிலுள்ள புளிய மரங்களை அகற்ற, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.