தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டருக்கு எதிரான மனு தள்ளுபடி
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டரை எதிர்த்து, தனியார் நிறுவனம் தொடர்ந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை, அரசு இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்துக்கான பொருட்களை சப்ளை செய்ய, மருத்துவப் பணிகள் கழகம், 'டெண்டர்' கோரியது.டெண்டரில் பங்கு பெறும் நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளில் 3.30 லட்சம் பெட்டகங்களை, அரசு அல்லது அரசு அமைப்புகளுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும் என்ற, நிபந்தனை விதிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, 'சாந்தி சர்ஜிகேர்' நிறுவனத்தின் டெண்டரை, மருத்துவப் பணிகள் கழகம் நிராகரித்தது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பை, அரசு அமைப்போ, அரசு நிறுவனமோ எனக் கூற முடியாது என காரணம் காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சாந்தி சர்ஜிகேர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்தின் நிர்வாக காட்டுப்பாட்டின் கீழ், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு உள்ளது.

'டெண்டர் ஆவணத்தில், அரசு அமைப்பு என்றால் என்ன என்பது வரையறுக்கப்படவில்லை' என கூறப்பட்டது.மனுவை, நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்; கூடுதல் பிளீடர் பி.விஜய் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தற்கு, விரிவான, திருப்தியான காரணங்கள் அளித்திருக்கும் போது, அதற்கு மாற்றாக கருத்து தெரிவிக்க, நீதிமன்றம் ஒன்றும் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு அல்ல.தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, அரசு அமைப்பா அல்லது அரசா என்பதை விசாரிக்க வேண்டிய தேவையில்லை. இந்த வழக்கில் தகுதி இல்லை. அரசு உத்தரவில் குறுக்கிட, மனுதாரர் தரப்பில் எந்த முகாந்திரத்தையும் காட்டவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X