ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்று விட வேண்டாம்.இன்று வாய்ப்புகள், எல்லாத் துறைகளிலும், ஏராளமான கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பை கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றவர்களை, உற்றுப் பாருங்கள். அவர்கள் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்திருப்பர்.
அந்தத் துறையில் கடுமையாக உழைத்திருப்பர்.பிடித்த துறையை தேர்வு செய்வதும், கடும் உழைப்புமே, ஒவ்வொருவரின் வெற்றிக்கு, மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.'நான் முதல்வன் - கல்லுாரிக் கனவு' நிகழ்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும், வரும் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.கல்லுாரி பட்டம் என்பதை எளிதாக அனைவரும் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அந்த பட்டத்தை தாண்டிய தனித்திறமை இருந்தால் தான், நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும்.தாய் மொழியான தமிழிலும், உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், அது பகுத்தறிவாக இருக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
எச்.சி.எல்., நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே, நேற்று முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.எச்.சி.எல்., நிறுவனம், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ - மாணவியர் ௨,௫௦௦ பேரை, தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்குவது என்றும், அப்பயிற்சிக்கான முழு செலவை அரசு ஏற்பது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாணவர்கள், பட்ட மேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.