சென்னை: வேலுார் சி.எம்.சி., ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் புதிதாக, வேலுார் சி.எம்.சி., ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 1,500 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை மையம், ஆறு பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 50 'டயாலிசிஸ்' படுக்கை வசதிகள் உள்ளன.நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி., ஜெகத்ரட்சகன், சி.எம்.சி., இயக்குனர் பீட்டர், இணை இயக்குனர் விக்ரம் மேத்யர் கலந்து கொண்டனர்.