கண்புரை நோய் 5 மடங்கு அதிகரிப்பு; கொரோனாவுக்கு பின் முதியோர் பாதிப்பு
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக, முதியோர்களிடம் கண்புரை நோய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக முதியோர், வழக்கமான கண் பரிசோதனைக்கு, அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்த்து விட்டனர்.

இதனால் கண் பாதிப்பு, அதற்கான சிகிச்சையை எடுக்காத சூழல் ஏற்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, ரத்த அழுத்தம், புகை பிடிப்பவர்கள், ஸ்டிராய்டு மருந்து உட்கொள்வோருக்கு, பிற நாள்பட்ட உடல்நல பிரச்னைகளும் அதிகரித்தன.இவற்றால், கண்புரை பாதிப்புகள் அதிகரித்தன. தற்போது, கண் மங்கலாக தெரிகிறது என, மருத்துவமனைக்கு வரும் 100 பேரில், 60 பேருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது. கொரோனாவுக்கு முன், 100 பேரில், 10 பேருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு இருந்தது.

இதனால், சென்னையில் ஐந்து மடங்கு கண்புரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிந்துள்ளது.கண்ணுக்கு உட்புறத்திலான அழுத்தத்தை, 40 வயதுக்கு மேற்பட்டோர் பரிசோதிக்க வேண்டும். அதேபோல், 50 வயதுக்கு மேற்பட்டோர், கண்புரை பாதிப்பு உள்ளதா என்பதை ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதிப்பது அவசியம். பார்வைக் கூர்மை, சிறுபிளவு விளக்கு, வண்ணப் பார்வைத்திறன், விழித்திரை மதிப்பீடு ஆகிய பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை அளித்தால், கண்புரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கலாம். ஆரஞ்சு, தக்காளி, ஸ்ட்ராபெரி, உருளைக்கிழங்கு, கிவி, புரோக்கோலி, பருப்பு வகைகள், பாதம் பருப்பு ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.இவ்வாறு அவர் கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X