சென்னை:உக்ரைன், எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையிலும், டில்லியிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடக்கின்றன. இருப்பினும் அவர்களது கோரிக்கைகளுக்கு அரசுகள் செவி சாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து, நேற்று மத்திய - மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் எல்.ஜி., சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் ஈடுபட்டனர்.அப்போது, 'தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லுாரிகள் மூடி கிடக்கின்றன. அவற்றில் தங்களது மருத்துவப்படிப்பை தொடர மத்திய - மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.