கே.வி., பள்ளி அருகே மழை நீர் வடிகால் பள்ளத்தால் அபாயம்
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அசோக் நகர்:அசோக் நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம், விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படுத்தும் விதமாக, அபாயகரமான வகையில் உள்ளது.


பள்ளி மாணவர்கள் சென்று வரும் இப்பாதையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்தாண்டு பருவமழையின்போது, சென்னை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு மழைநீர் வடிவதற்கு ஏற்ப வடிகால் கட்டமைப்புகள் இல்லாததே காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்தது.குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து திட்ட மதிப்பீடு மேற்கொண்டு, 166 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, கே.கே., நகர், தி.நகர், விருகம்பாக்கம், சி.வி.ராமன் சாலை, டி.டி.கே., சாலை, சித்தரஞ்சன் சாலை, அசோக் நகர், ஆற்காடு சாலை, பசுவுல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதற்காக, பழைய மழை நீர் வடிகால்கள் உடைக்கப்பட்டன. அதே இடத்தில், அதிக அகலத்துடனும் ஆழத்துடனும் வரும் நாட்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில், வடிகால் அமைக்க பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

வெட்ட வெளிச்சம்
இந்த மழைநீர் வடிகால் பணியின் போது, பல இடங்களில் முறைகேடான கழிவு நீர் இணைப்புகள் வெட்ட வெளிச்சமாயின. மழை நீர் வடிகால் கட்டுமான பகுதி முழுதும் கழிவு நீராக காட்சி அளித்தது.இந்த நிலையில் கடந்த வாரம் ஓரிரு நாட்கள் கொட்டி தீர்த்த கன மழையால், வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெள்ளம் தேங்கியது.திறந்த நிலையில் கிடக்கும் இந்த பள்ளத்தால், விபத்து அபாயம் தொடர்கிறது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சம்பந்தப்பட்ட துறையினரோ, சைக்கிள் மோதினாலே சரிந்து விழும் தடுப்புகள் மட்டும் அமைத்துள்ளனர்.இதே நிலை தான், அசோக் நகர், டாக்டர் நடேசன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகேயும் உள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இப்பள்ளியில் கல்வி பயிலுகின்றனர். அவர்களை பள்ளியில் விடுவதற்காக வரும் பெற்றோரும், பொதுமக்களும் என, இச்சாலை காலை மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும்.இந்த நிலையில், மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, போக்குவரத்து நிறைந்த இப்பாதையில் விபத்து அபாயம் ஏற்படாதபடி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும்.



கவனம் தேவை?

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளில், மாநகராட்சி இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்படுகிறது. குறிப்பாக கனரக இயந்திரங்களான ஜே.சி.பி., உள்ளிட்டவற்றால் பள்ளங்கள் தோண்டப்படும்போது, பழமையான மரங்கள் பலவற்றின் வேர்ப்பகுதி அறுந்து உறுதித்தன்மை இழக்கின்றன. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாயும் அபாயம் நிலவுகிறது. அவற்றையும், மழை நீர் வடிகால் தோண்டப்படும் பகுதியை ஒட்டி உள்ள சுற்றுச்சுவரையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இருதினங்களுக்கு முன், கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையில், மழை நீர் வடிகால் பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் நின்ற மரம் சரிந்து கார் மீது விழுந்ததில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வாணி, 57, என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




உரிய பாதுகாப்பின்றி

வடிகால் பணியில் தொழிலாளர்கள்கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து, கோயம்பேடு நோக்கி செல்லும் சாலை நுாறடி அகலம் உடையது. இங்கு, மழை நீர் தேங்குவதை தடுக்க, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் இருந்து, அடையாறு ஆறு வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் கட்டப்படுகிறது.ஆனால், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்யப்படுகிறது. சமீபத்திய மழையில், வடிகால் கரை பகுதி இடிந்து விழுந்தது.மெட்ரோ ரயில் துாண்களில் இருந்து, 1 அடி விட்டு பள்ளம் தோண்ட வலியுறுத்தப்பட்டது. ஆனால், துாண்களை ஒட்டி பள்ளம் தோண்டியதால், துாண்களின் கட்டுமானம் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சமீபத்திய மழையின்போது, புது வண்ணாரப்பேட்டையில், சுற்றுச்சுவர் இடிந்து மூன்று கார்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.அதுபோன்ற அசம்பாவிதம், இங்கும் நடைபெறாத வகையில், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கி பணி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், மெட்ரோ ரயில் துாண்களில் இருந்து, போதிய இடைவெளி விட்டு பள்ளம் தோண்ட வேண்டும் என கூறினர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X