வாளி நீரில் மூழ்கி குழந்தை பலி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வாளி நீரில் மூழ்கி குழந்தை பலி
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 

திருப்பூர்:பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிஸ்நாத் மார்த்தோ, 29; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சன்விகா தேவி, 27. தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில், 11 மாதத்தில் தஞ்சன் என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் திருப்பூர், அனுப்பர்பாளையம், அவிநாசி நகரில் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்தனர். குழந்தையை துாங்க வைத்து விட்டு, அருகில் உள்ள வீட்டுக்கு மனைவி சென்றார். துாக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந்தது. வாளியில் நீர் இருந்ததால், குழந்தையால் கூச்சலிட முடியவில்லை. சிறிதுநேரம் கழித்து பார்த்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி, 11 மாத குழந்தை இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X