'லோக் அதாலத்' மூலம் பிரிந்த தம்பதி கைகோர்ப்பு
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பல்லடம்;பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சப் கோர்ட், ஜே.எம்., கோர்ட் ஆகியவற்றில் இரண்டு அமர்வுகளாக லோக் அதாலத் நடந்தது. சப் கோர்ட் நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் தனபாக்கியம் மற்றும் நீதிபதி சித்ரா, வழக்கறிஞர் சக்திதேவி ஆகியோர் கொண்ட அமர்வுகளில், வழக்கு விசாரணை நடந்தது. காசோலை, குடும்ப நல வழக்குகள், வங்கி சொத்து, மற்றும் சிறு வழக்குகள் என, மொத்தம், 159 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இதில், 70.88 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.


திருப்பூரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்தார். இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட இவ்வழக்கை, வழக்கறிஞர் மகேஸ்வரன் நடத்தினார். கடந்த ஓராண்டாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். 'லோக் அதாலத்'தில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி அமர்வு, இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். இதையடுத்து, மனைவி வழக்கை வாபஸ் பெற, நீதிபதி முன்னிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்து கையெழுத்திட்டனர். கோர்ட்டில் இருந்து இருவரும் சேர்ந்தபடியே புறப்பட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X