2,679 வழக்குகளில், ரூ.32.27 கோடிக்கு சமரசத்தீர்வு!
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 'லோக் அதாலத்'தில், 2,679 வழக்குகளில், 32 கோடி ரூபாய்க்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் தாலுகா வாரியான அனைத்து கோர்ட்களிலும் 'லோக் அதாலத்' நடந்தது.இதில், மாவட்ட கோர்ட் வளாகத்தில், 10 அமர்வுகளும், அவிநாசி, காங்கயம், உடுமலை, -தாராபுரம், பல்லடம் ஆகியவற்றில் தலா, 2 அமர்வுகளும் என, மொத்தம், 20 அமர்வுகள் நடந்தன.


திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் நடந்த 'லோக் அதாலத்'தை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி குமார், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
2,679 வழக்குகளுக்கு, 32 கோடியே, 27 லட்சத்து, 74 ஆயிரத்து, 848 ரூபாய்க்கு சமரசம் செய்யப்பட்டது. 305 மோட்டார் வாகன விபத்து வழக்கில், 16 கோடியே, 37 லட்சத்து, 75 ஆயிரத்து, 511 ரூபாய்; 231 சிவில் வழக்குகளில், 14 கோடியே, 6 லட்சத்து, 33 ஆயிரத்து, 396 ரூபாய்; 85 காசோலை மோசடி வழக்கில், 58 லட்சத்து, 40 ஆயிரத்து, 390; ஏழு குடும்ப நல வழக்கில், 8 லட்சம்; 2,008 சமரசத்துக்கு உரிய குற்ற வழக்குகளில், 41 லட்சத்து, 49 ஆயிரத்து, 500 ரூபாய் மற்றும் 43 வங்கி வாராக்கடன் வழக்கில், 75 லட்சத்து, 76 ஆயிரத்து, 51 ரூபாய்க்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X