மதுரவாயல்:வேலுாரைச் சேர்ந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷா, 21. இவர், மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார்.இவர், தன்னுடன் பணி புரியும் லோகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து, மதுரவாயல், லட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை லோகேஸ்வரி எழுந்து பார்த்தபோது, சமையல் அறையில் நிஷா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், நிஷா யாருடனோ நீண்டநேரம் மொபைல் போனில் 'சாட்டிங்' செய்தது தெரியவந்தது.இதையடுத்து, நிஷா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.