போலீஸ் செய்திகள்...
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


டிராக்டர் பறிமுதல்

கொட்டாம்பட்டி: மதுரை எஸ்.பி., சிவபிரசாத்தின் தனிப்படை எஸ்.ஐ., சுப்பிரமணி தலைமையில் போலீசார் வஞ்சிநகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் ஏற்றி வந்த அலங்கம்பட்டி டிரைவர் செல்வம் தப்பினார். கொட்டாம்பட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் -டிரைவர் பலிசோழவந்தான்: துாத்துக்குடியில் இருந்து மீன் ஏற்றிய மினிவேன் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை துவரிமான் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வைகை ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் வேன் மோதியது. இதில் டிரைவர் தர்மபுரி சந்துரு இறந்தார். காயமடைந்த இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வேனின் லோடு ஏற்றும் பின்பாகம் கழன்று ஆற்றுக்குள் விழுந்தது..
.
மின்வாரிய ஆய்வாளர் கொலைமேலுார்: திருவாதவூர், உலகுபிச்சன்பட்டியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி 52, திருவாதவூர் மின்வாரிய அலுவலத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கலியமூர்த்தியின் மனைவி ஜெனிட்டா 50, மகள் தேவி 22, வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினர். கதவுகள் திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்ததில் கட்டிலில் கலியமூர்த்தி கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பெண் தொடர்பான பிரச்சனையில் கொலை நடத்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

இது தொடர்பாக நேற்று இரவு மனைவி, மகள் உள்ளிட்ட 5 பேரிடம் மேலுார் போலீசார் விசாரித்தனர்.போலீஸ்காரர் தற்கொலை ----மதுரை : நீலகிரி ஆயுதப்படை போலீஸ்காரர் மகாலிங்கம். இவர் மதுரையில் உள்ள அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2013ல் செல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மறியல்: 21 பேர் கைதுஉசிலம்பட்டி: கள்ளர்

கூட்டமைப்பின் சார்பாக திடீர் மறியல் நடந்தது. கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் உள்ள மாணவர்கள் விடுதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையில் இணைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரி தேவர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் 21பேரை கைது செய்தார்.கொலை: மேலும் ஒருவர் கைதுவாடிப்பட்டி : யூனியன் ஆபீஸ் காலனி முருகன் 47, கொய்யாப்பழ வியாபாரி. இவர் ஜூன் 23 இரவு தாதம்பட்டி ஒட்டான்குளம் அருகே கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தாதம்பட்டி காலனியை சேர்ந்த 16, 17 வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான அப்பகுதியை சேர்ந்த மிதுனை 19, நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X