சிமென்ட் குழாய்களை அழித்து சர்வீஸ் ரோடு ; 250 ஏக்கர் தண்ணீர் இல்லாமல் தரிசாகும் அவலம்
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மேலுார் ; மேலுார், பெரிய சூரக்குண்டு கிராமம் பெரியமேளம் கண்மாயில் தண்ணீர் வெளியேறும் சிமிண்ட் குழாய்களை நான்கு வழிச்சாலை நிர்வாகத்தினர் மணலை கொட்டி அழித்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.இக் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியமேளம் கண்மாய் 115 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல பதிக்கப்பட்ட சிமென்ட் குழாய்கள் வழியாக தண்ணீர் வெளியேறியது.

இந்நிலையில் தற்போது புதிதாக சர்வீஸ் ரோடு பணிகள் நடைபெறுவதால் ரோட்டின் மீது மண்ணை போட்டு மூடி கால்வாய்களை அழித்துவிட்டனர். இதனால் கண்மாய் தண்ணீர் வெளியேறுவது வாய்ப்பின்றி போய்விட்டது.விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கண்மாய் தண்ணீர் வெளியேற நான்கு வழிச்சாலையின் இரு புறமும் குழாய்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளன.

தற்போது புதிதாக சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியின் போது குழாய்களின் நடுவில் மணலை போட்டு மூடிவிட்டனர். மணலை அகற்ற கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குழாய்களில் தண்ணீர் வெளியேற ஏற்பாடு செய்வதாக கூறுகின்றனர்.ஆனால் நிலமட்டத்தில் இருந்து 8 அடி உயரத்தில் ரோடு பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி 250 ஏக்கர் தரிசாகும் அவலம் நிலவுகிறது.

குழாய்கள் வழியாக கண்மாய் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.திட்ட மேலாளர் செந்தில் கூறுகையில், ''சூரக்குண்டு பகுதியில் புதிதாக குழாய்கள் பதித்து தண்ணீர் வெளியேறவும், சர்வீஸ் ரோட்டின் முடிவில் கல்சுவர் கட்டவும் திட்ட மதிப்பீடு தயாரித்து தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு அனுப்பி உள்ளோம். அனுமதி கிடைத்ததும் கட்டப்படும்'' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X