அமைச்சருக்கு எதிரானதேர்தல் வழக்கு நிராகரிப்பு
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, 2016ல் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், திருச்செந்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார்.பொய்யான தகவலுடன், அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், தேர்தல் அதிகாரி அதை ஏற்றது சரியல்ல என்றும், மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில், வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார்,

துரை குணசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு:வேட்பு மனுவை பரிசீலித்த பிறகே தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார். நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. 15வது சட்டசபை முடிவுக்கு வந்து, 16வது சட்டசபைக்கும் தேர்தல் நடந்து முடிந்து, அதில், நான் வெற்றி பெற்றுள்ளேன்.தற்போது, அமைச்சராகவும் பதவி வகிக்கிறேன். எனவே, 2016ல் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை விசாரிப்பது அவசியமற்றது;

தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார்.கடந்த, 2016ல் நடந்த தேர்தலுக்கான பதவி காலம் முடிந்து விட்டதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முகாந்திரம் இல்லை எனக்கூறி, தேர்தல் வழக்கை நிராகரித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X