உடுமலை : உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகப்படியான ஆட்டிறைச்சிக்கடைகள் செயல்படுகின்றன. விற்பனை செய்யப்படும் இறைச்சி, 'தரமானதாக உள்ளது', என உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சான்று வழங்கிய பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால், பல கடைகளில், இவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படுவதே கிடையாது.மாறாக, கடையை ஒட்டிய பகுதியிலேயே, மக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் ஆடுகள் வதை செய்யப்படுகிறது.