கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன், சாக்கடை கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், ராமகிருஷ்ணபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் மாநகராட்சி பகுதியில், கடந்த வாரம் அடிக்கடி மழை பெய்தது. அப்போது, சாக்கடை கழிவுநீர் வாய்க்கால், துார்வாரப்படாததால், நகரப்பகுதிகளில் பல இடங்களில், தண்ணீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தியது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணபுரம் சாலையில், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் துார்வாரப்பட்டு அகற்றப்பட்ட மண் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவில்லை. மலைபோல் தேங்கியுள்ளது.
தற்போது, சாக்கடை கால்வாய் மண் குவியலால், ராமகிருஷ்ணபுரம் சாலையிலும், போக்குவரத்து தடைபட்டு, நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை கால்வாய் மண்ணை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.