நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் தீவன அரவை ஆலைகளுக்காக, டில்லியில் இருந்து சரக்கு ரயிலில், 2,600 டன் கோதுமை வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரிக்கும் அரவை ஆலைகள், மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்படுகின்றன.
அவைகளின் தேவைக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும், வட மாநிலங்களில் இருந்து வாங்கிவரப்படுகிறது. அந்த வகையில், டில்லியில் இருந்து, 40 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் கோதுமை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.