நாமக்கல் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் 1,890 வழக்கில் ரூ.23.33 கோடி வழங்கி சமரசம்
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மாவட்டத்தில் நேற்று நடத்த தேசிய லோக் அதாலத்தில், 1,890 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 23.33 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார். இதில் விபத்துகள், காசோலை, குடும்ப நலம், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு என, பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும், சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது. 'மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என, வேறுபாடு கிடையாது. இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது, மேல்முறையீடு செய்ய இயலாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்.
அதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம், 3,581 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில், 1,890 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, 23 கோடியே, 32 லட்சத்து, 63 ஆயிரத்து, 796 ரூபாய் செலுத்தி, வழக்குகள் முடிக்கப்பட்டன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X