சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன்களை ஆக்கிரமித்து, துருப்பிடித்து வீணாகி வரும், உரிமை கோராத, 632 வாகனங்களை, விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள், ஆவணம் இல்லாத வாகனங்கள், சேலம் மாநகரில் உள்ள, 17 போலீஸ் ஸ்டேஷன் வளாகம், சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஸ்டேஷனுக்குள் விஷ பூச்சிகள் படையெடுத்ததோடு, வாகனங்களும் துருப்பிடித்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால் வாகனங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க, கமிஷனர் நஜ்முல் ேஹாதா உத்தரவிட்டார். இதன்படி, ௧௭ ஸ்டேஷன்களில், 632 வாகனங்கள் உரிமை கோரப்படாதது தெரிந்தது. இவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் - 620, மூன்று, நான்கு சக்கர வாகனம் - 12 ஆகியவை, ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏல நடைமுறை பணிகளை, ஆயுதப்படை மோட்டார் வாகன பராமரிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.