போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண, வாட்ஸ் ஆப்பில், 'உறவுகள்' குழு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி, அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
போக்குவரத்து வளர்ச்சிக்கு ஆலோசனை, பணியாளர், பராமரிப்புக்கு நிவர்த்தி செய்ய வேண்டியவற்றை தெரிவிக்க வசதியாக, 94896 75311 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில், 'உறவுகள்' பெயரில் குழு தொடங்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். அதில், தங்கள் கருத்து, பிரச்னைகளை பதிவிட்டு, போக்குவரத்துக்கழக வளர்ச்சிக்கு வழிவகுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தை தொடர்ந்து சென்னை, எஸ்.இ.டி.சி., மதுரை, கோவை, கும்பகோணம், விழுப்புரம், நெல்லை கோட்டங்களிலும், அந்தந்தந்த கோட்டங்களுக்கு பிரத்யேக வாட்ஸ்ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.