சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாதம் 1-ம் தேதி ஒரே நாளில் 59 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் , நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 604 ஆக கிடுகிடு வென அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி 160 பேர் மருத்துவமனைகளிலும் 38 பேர் கொரோனா கவனிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து காஞ்சிபுரம், திருள்ளூரை தொடர்ந்து சென்னையிலும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. மாநகராட்சியில், மே மாதம் முற்பகுதி வரை ஒரு நாள் கொரோனா பாதிப்பு சராசரியாக 40 என்ற எண்ணிக்கைக்கும் கீழ் பதிவாகி வந்தது.
மாதத்தின் பிற்பகுதியில் மெல்ல, மெல்ல கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது..ஜூன் 1ம் தேதி 59 என்ற எண்ணிக்கையி் பதிவாக வந்த தொற்று இம்மாதம் 10-ம் தேதிக்க பின் வேகமெடுத்தது.
முன்னெச்சரிக்கை
கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் தினசரி சராசரி 600 ஐ கடந்து பதிவாகி வருகிறது.
சென்னையை ஒப்பிடுகையி்ல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மிக குறைவாக உள்ள போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுஉள்ளதுடன், அதை அணியாதோருக்கு அபாரதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதே போல் பெரிய வணிக நிறுவனங்களில் ஏசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தடுக்கவும், சமூக இடைவெளியை உறுதி செய்யயும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரங்களில் உள்ள நடைமுறையே இன்றளவும் தொடர்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் 15 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களின் தொடர் அலட்சியமும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதால் சென்னையில் தினசரி தலா 20 சிறார்கள் மற்றும் முதியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
![]()
|
அறிவுறுத்தல்
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில் 160 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாநகராட்சி கொரோனா கவனிப்பு மையத்தில் 38 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
சிறார்கள் முதல் முதியோர் வரை கொரோனா வால் பாதிக்கப்பவுது அதிகரித்து வரும் நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்டி, சென்னையில் பொதமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி முக கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிப்பது, சமூக இடைவெளியை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி கமிஷனர் தலைமயைில் அதிகாரிகள் ஆலோசித்து ஓரிருநாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறிது,
சென்னையில் பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் ஒலி பெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அதன்பின் தொற்று அதிகரிப்புக்கு ஏற்ப அபராதம் விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.நிலைமைக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் -