பிளஸ்1 தேர்வில் 94.63 சதவீத தேர்ச்சி:ஐந்தாம் இடத்தில் கோவை மாவட்டம்
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை:பிளஸ்1 தேர்வில் கோவை மாவட்டம், 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில், ஐந்தாம் இடத்தை பிடித்து பின்தங்கியது. மாநிலத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்து முடிந்தன. இந்நிலையில், நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, 365 பள்ளிகளைச் சேர்ந்த, 16 ஆயிரத்து, 631 மாணவர்கள், 18 ஆயிரத்து, 949 மாணவியர் என, மொத்தம், 35 ஆயிரத்து, 580 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 15 ஆயிரத்து, 222 மாணவர்கள், 18 ஆயிரத்து, 448 மாணவியர் என, மொத்தம், 33 ஆயிரத்து, 670 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 91.53, சதவீதம், மாணவியர், 97.36 சதவீதம் என, மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம், 94.63 சதவீதமாக இருந்தது. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:கோவை மாவட்டத்தில், 90 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,469 மாணவர்கள், 5,277 மாணவியர் என, 9746 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 3,591 மாணவர்கள், 4,928 மாணவியர் என, 8,519 பேர் தேர்ச்சி பெற்று, 87.41 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்தனர்.

தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்கள்
கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை, 20 பார்வை குறைபாடுள்ளவர்கள், 32 காது கேளாதோர், 26, உடல் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்கள், 82 என, 160 மாற்றுத்திறனாளிகள் எழுதினர். இவர்களில், 20 பார்வை குறைபாடுள்ளவர்கள், காது கேளாதவர்களில், 28 பேரும், உடல் குறைபாடு உள்ளவர்கள் பிரிவில், 25 பேரும், மற்றவர்களில், 79 பேரும் தேர்ச்சி பெற்றனர். பார்வை குறைபாடுள்ளவர்கள், 100, உடல் குறைபாடு உள்ளவர்கள், 96.15, காது கேளாதவர்கள், 87.50, மற்றவர்கள், 96.34 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 94.99 சதவீதம் தேர்ச்சியை மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ளனர்.

பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்
பள்ளிக்கல்வி துறை அளித்த தகவலின்படி, சுயநிதி மெட்ரிக் பள்ளிகள், 99.58, அரசு பள்ளிகள், 87.41, அரசு உதவிபெறும், 93.64, நகராட்சி, 85.28, ஆதிதிராவிடர் நலத்துறை, 90.74, மலை கிராமம், 96.43 என, தேர்ச்சி விகிதத்தை பள்ளிகள் பதிவு செய்துள்ளன.



சரிந்த தேர்ச்சி விகிதம்

2019 - 20ம் கல்வியாண்டில், தமிழகத்தில் நடந்த பிளஸ்1 பொதுத்தேர்வில், மாநில அளவில், 98.10 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது. இந்தாண்டு தேர்ச்சி சதவீதம், 3.47 சதவீதம் சரிந்து, 94.63 சதவீதம் பெற்று ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 35 ஆயிரத்து, 580 பேரில், 1,910 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X